நான் அகந்தையானவன் – பிமல் ரத்நாயக்க பகிரங்கம்
மக்கள் துரோகிகளுக்கு தாம் அகந்தையான ஒரு நபர் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை சந்திக்க வந்த நபர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கேட்பதற்கு ஓர் பொருத்தமான இடம்
குறித்த நபர், அமைச்சர் கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை வழிமறித்து பேசுவதற்கு முயற்சித்தார்.
அதன் போது அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் அவருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.
இதனைத் தொடர்ந்து குறித்த நபர் ”எங்களால் தான் நீங்கள் ஆட்சி பீடம் ஏறினீர்கள், பழையவற்றை மறந்து விட்டீர்கள், அகந்தையாக செயல்பட வேண்டாம்” எனவும் பேராதனை பகுதியில் தாம் யார் என்பதை கேட்டு பாருங்கள் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது தாம் மக்கள் துரோகிகளுக்கு அகந்தையானவன் எனவும் மக்களுக்கு மிகவும் பணிவான ஒரு நபர் எனவும் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு விடயம் என்றாலும் அதனை கேட்பதற்கு ஓர் பொருத்தமான இடம் இருக்கின்றது எனவும் கண்ட இடத்திலும் எல்லா விடயங்களையும் பேச முடியாது எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நல்ல விடயங்களை செய்ய முற்படும் போது அதற்கு ஏன் இவ்வாறு இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது என அமைச்சர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த காணொளி தற்பொழுது தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.