அரசாங்கத்தில் இணைவது குறித்து ஹர்ஷ விளக்கம்
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விளக்கம் அளித்துள்ளார்.
தாம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதற்கு முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் நீண்ட ஓர் விளக்கத்தை அவர் அடித்துள்ளார்.
நாட்டுக்கு புதிய ஒரு யுகம் தேவைப்படுவதாகவும் குறுகிய அரசியல் லாபம் கருதி தான் எந்த ஒரு தீரனையும் தீர்மானத்தையும் எடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டு முக்கிய பதவியை ஏற்கப் போவதாக வெளிவரும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
தமது குடும்பத்தில் எவரும் அரசியலுடன் தொடர்பு பட்டவர்கள் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளம் வயது முதல் இந்த தேசம் தொடர்பில் தனக்கு உண்டான பற்று இலங்கையும் உலகின் அபிவிருத்தி அடைந்த ஓர் நாடாக மாற வேண்டும் என்ற கனவு தமக்கு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் நோக்கிலேயே அரசியலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் தம்மை அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்கு முயற்சித்து வருவதாகவும் அந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி அளிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் தனது அரசியல் கொள்கைகளில் மாறுபடாது முன்னோக்கி நகர்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் ஒரு தோல்வி அடைந்த தூரநோக்கற்ற, பொருளாதாரம் தொடர்பில் அனுபவமற்ற அரசாங்கம் என்பது தெளிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பறந்த எண்ணங்கள் அற்ற இந்த அரசாங்கத்தினால் நாட்டை கட்டி எழுப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் எதிர்காலத்தில் மேலும் மக்களுக்கு புரியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் எந்தவித பேச்சு வார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பத்தை விளைவிக்க சில தரப்பினர் போலி பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டி எழுப்பும் தமது முனைப்புகளுக்காக அரசாங்கத்துடன் தொடர்ந்து போராட போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டம் என்பது அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் எதிர்ப்பது கிடையாது எனவும் அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயங்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான நேரத்தில் எந்த ஒரு பாரதூரமான சவால்களையும் ஏற்றுக் கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam