தலைசிறந்த நாடாக தமிழ் நாட்டை மாற்றிக் காட்டுகின்றேன்! - சீமான்
நாம் தமிழர் கட்சியை வெற்றிபெற செய்தால் இந்த உலகத்தில் மிகவும் தலைசிறந்த நாடாக தமிழ் நாட்டை மாற்றி காட்டுவேன் என அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 6ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“தனது ஆட்சியில் அனைவருக்கும் சமமான கல்வி, மருத்துவம், தூய குடிநீர், தடையற்ற மின்சாரம், சீரான போக்குவரத்து பாதை, அரச வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுப்பேன்.
அதற்கான வாய்ப்பை தரவேண்டும். உங்கள் மதிப்பு மிக்க வாக்குகளை நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு செலுத்துங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam