பிக்குவால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி: அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்த கருத்து
பிக்குவால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்காக நிபந்தனையின்றி செயற்படுவேன் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் (Saroja Savithri Paulraj) தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு செய்யப்படும் ஒவ்வொரு சம்பவத்திலும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசு வாய்ப்பளித்துள்ளது.
திறைசேரியில் மாயமான பணம் பிரபல நாட்டில் இருக்கிறது: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்
இந்தச் சம்பவத்தில் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வாளர்கள் உரிய முறையில் செயற்பட்டார்களா என்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
இந்தச் சம்பவத்தில் தான் பொலிஸாருக்கோ அல்லது பிக்குவுக்கு சார்பாக செயற்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை முடிந்தவரை தலையிடுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகளைப் பாதுகாக்கத் தான் முன்நிற்பதாகவும் அமைச்சர் கூறினார்.
சட்ட அமுலாக்கத்தில் எந்தவொரு தரப்பும் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கப்படாது என்பதை உறுதி செய்வேன் என்றார்.