மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலம்: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Photos)

Government Covid Vaccine People Johnston Fernando
By Kanamirtha Jan 09, 2022 08:12 AM GMT
Report

நிவாரணம் வழங்கும் வரை ஏசினார்கள். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாவத்தகம நீர் வழங்கல் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் ஒரு நியாயமான அரசாங்கம். நாங்கள் எங்கும் மத, இன பிளவுகளை விதைக்கும் அரசாங்கம் அல்ல. இன, மத பிளவுகளை விதைப்பதாக எதிர்க்கட்சிகள் எம்மை அவதூறு செய்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர் மற்றும் மலாய் என அனைத்து சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.

முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை வெற்றிகரமாக ஏற்றி, கோவிட் தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றிய தலைவராக வரலாற்றில் இடம் பெறுவார். நம் அண்டை நாட்டில் மக்கள் நின்ற நிலையில் இறப்பதைக் காண்கிறோம்.

எங்கள் மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் ஆஸ்பத்திரிகளில் இறந்து விடுவார்கள், படுக்கைகள் இல்லாமல் மக்கள் இறந்துவிடுவார்கள், மேலும் கோவிட் தொற்றுநோய் காரணமாக இலங்கையில் சுமார் 200,000 மக்கள் மரணிப்பார்கள் என்று எங்கள் எதிர்க்கட்சி கணித்துக் கூறியது. தடுப்பூசி கொண்டு வந்தபோது, ​​ தடுப்பூசி போட வேண்டாம் என்று கூறினார்கள்.

தடுப்பூசி போடப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் இறந்து விடுவார்கள் என்றார்கள். தடுப்பூசிகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இப்படி மக்களுக்குச் சொன்ன தலைவர்கள் ரகசியமாகச் சென்று தடுப்பூசி போட்டார்கள்.

ஆனால் அவர்களுக்கு வாக்களித்த மக்களிடம் நிவாரணம் பெற்றுத் தருமாறு கேட்கவில்லை. கோவிட் தொற்று நோய் நிலைமையின் போது, ​​ தங்களுக்கு வாக்களித்த மக்களை முடிந்தவரைத் தெருக்களில் இறங்கி, கோவிட் தொற்றைப் பரப்பி , அவர்களின் சடலங்களின் மீது அரசியல் அதிகாரத்தைப் பெற எதிர்க்கட்சி செயற்பட்டது.

இந்த நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்குக் கொண்டு செல்வோம். நாடு வங்குரோத்து அடைய இடமளிக்க மாட்டோம். டாலர்கள் இல்லாமல் நாடு வங்குரோத்து ஆகும் என்றும், 15ம் திகதிக்குள் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்க்கட்சி எதிர்பார்க்கிறது. இவை தற்காலிகமான பிரச்சினைகள்.

இந்தப் பிரச்சினைகள் நம்மை மட்டுமல்ல, உலகின் மற்ற நாடுகளையும் பாதித்துள்ளது. ஊழலற்ற இந்த நாட்டை ஆட்சி செய்ய ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி நாட்டை கட்டி எழுப்பி வருகிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் எதிர்க்கட்சிகள் கிறீஸ் பிசாசுகளை உருவாக்கினார்கள். நாடாளுமன்றம் தனது அதிகாரத்தை இழந்துள்ளது .

ஆளும் தரப்பிலிருந்து எதிர்த் தரப்புக்கு 30 -40 பேர் தாவப் போகிறார்கள். இப்படி ஒவ்வொரு பிசாசுகளை எதிரணி உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த கனவு அரண்மனைகளுக்குள் சிலர் அமர்ந்து எம்மீது சேறு பூசுகிறார்கள். நாம் அவர்களை அவ்வளவாகப் பொருட்படுத்துவதில்லை. இந்த நாட்டை அபிவிருத்தி செய்வோம் என இந்த நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தோம்.

அந்த வாக்குறுதியை நாங்கள் காப்பாற்றுகிறோம். உலகம் முழுவதையும் பாதித்த கோவிட் தொற்றுநோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினோம். வெற்றிகரமான தடுப்பூசிகள் மூலம் நாம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளை விட முன்னணியில் இருக்கிறோம். தயக்கத்துடன் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியதாயிற்று.

எங்களில் யாருக்கும் அதில் விருப்பமில்லை. புத்தாண்டில் மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து நாங்கள் இவற்றைச் செய்தோம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. நிவாரணம் வழங்கப்படும் வரை, வாக்குறுதி அளிக்கப்பட்ட நிவாரணம் எங்கே என்று வினவினார்கள்.

நிவாரணம் வழங்கப்படும் போது பியகமவில் உள்ள தொழிற்சாலையில் அச்சடித்து வழங்குவதாக விமர்சிக்கிறார்கள். மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் போது எதிர்க்கட்சிகளின் உள்ளத்தில் உள்ள கபட எண்ணம் வெளியே வருகிறது. எதிர்க்கட்சிகள் உங்களை வீழ்த்த முயன்றாலும் மக்கள் வீழ்ந்து விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.  

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US