ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி
தென்னிந்தியாவின் ஹைதராபாத் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் நினைவுச்சின்னத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஊடக தகவல்களின்படி, நேற்று(18.05.2025) அதிகாலை தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, இந்த மூன்று மாடி கட்டிடத்தில் 21 பேர் இருந்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, மயக்க நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பதினேழு பேர் மரணமாகினர்.
பாதுகாப்பு விதிமுறைகள்
குறித்த கட்டிடத்தின் படிக்கட்டுகள் மிகவும் குறுகலாக இருந்தமையாலும், ஒரே ஒரு வெளியேறும் இடம் மட்டுமே இருந்ததாலும், பாதிக்கப்பட்டவர்கள் தப்பிக்க முடியவில்லை.
இந்தியாவில் தீ விபத்துகள் பொதுவானவை. அங்கு கட்டிட சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பெரும்பாலும் குடியிருப்பாளர்களால் மீறப்படுகின்றன என்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.

வரலாறு காணாத ஒரு பொதுக்கூட்டம்.. சீமான் தலைமையில் இடம்பெற்ற மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
