வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கோவிட் வைரஸின் கலப்பின திரிபு
பிரித்தானிய மற்றும் இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கோவிட் வைரஸ் திரிபுகள் கலந்த கலப்பின வைரஸ் திரிபு வியட்நாம் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
இந்த புதிய கலப்பின வைரஸ் திரிபு மிக வேகமாக பரவக் கூடியது எனவும் அது காற்றின் மூலம் பரவும் வாய்ப்பு அதிகம் எனவும் அந்நாட்டின் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் உலகில் பல நாடுகளை ஒப்பிடும் போது வியட்நாமில் கோவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
வியட்நாமில் இதுவரை 6 ஆயிரத்து 713 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர்.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அந்நாட்டில் ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கையானது 0.5 வீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.