ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்களுக்கு தொற்று இல்லை..
ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர், உபதலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர் இராமையா பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேற்று இரவு வெளியான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையிலேயே தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி நகரசபையின் உறுப்பினர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவருடன் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நகரசபையின் ஏனைய உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வெளியான நிலையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan