வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறித்த கணவன் - மனைவி யாழில் கைது: விசாரணையில் வெளியான திட்டம்
புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்கள் மற்றும் இலங்கையில் உள்ளவர்கள் என பலரை ஏமாற்றி, பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த மூவரை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த குழுவில் கணவன் - மனைவி மற்றும் மனைவியின் சகோதரன் ஆகியோர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை இன்று(10.06.2026) இடம்பெற்றுள்ளது.
கணவன் - மனைவி கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை ஆசை வார்த்தை கூறி குறித்த பெண் ஒரு வீட்டுக்கு அழைத்து செல்வார்.
இதன்போது அந்த இடத்திற்கு வரும் கணவனும் அவரது மனைவியின் சகோதரரும் சம்பவ இடத்திற்கு சென்று காணொளி பதிவு செய்து, அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளனர்.

போதைக்கு அடிமையாக இருந்த பெண்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே பாணியில் ஒரு சம்பவம் இடம்பெற்ற நிலையில், அது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த குழுவினரை சுன்னாகம் பொலிஸார் இன்று(10) கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே முறைப்பாடுகள் இருப்பதாகவும், அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுரேஷ் சலேவை காப்பாற்ற துடிக்கும் ராஜபக்சர்கள்..! இன்னும் சில நாட்களில் கட்டவிழப்போகும் முக்கிய முடிச்சுக்கள்
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam