சுரேஷ் சலேவை காப்பாற்ற துடிக்கும் ராஜபக்சர்கள்..! இன்னும் சில நாட்களில் கட்டவிழப்போகும் முக்கிய முடிச்சுக்கள்
கோட்டாபய ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்திற்கு சார்பான கொலைகளையும், மிரட்டல்களையும் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கை ஆளாகவே சுரேஷ் சலே பார்க்கப்படுகிறார் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இன்றைய அநுர அரசின் நகர்வுகள் குறித்து எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு காட்டமாக பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுர அரசின் நிலைபாடுகளை எடுத்துரைக்கும் அளவுக்கு நாமல் ராஜபக்சவிற்கு அறிவு இல்லை. அதே சமயம், கோட்டாபய ஆட்சிக்காலத்தில் அரசுக்கு சார்பான கொலைகளையும், மிரட்டல்களையும் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டவரே சுரேஸ் சலே.
அடுத்ததாக கோட்டபாய கைது செய்யப்படலாம் என்ற பதற்றமான நிலை தற்போது உருவாகியுள்ளது.
பிள்ளையான் மற்றும் சலே வாயை திறந்தால் கோட்டாபய நிச்சயம் கைது செய்யப்படலாம். உண்ணாவிரதம் இருப்பது வேடிக்கையாகவே பார்க்கப்படுகிறது என்றார்.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam