கொழும்பில் இளம் மனைவியை கொலை, தற்கொலை செய்த கணவன் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெஸ்பேவ, பட்டுவந்தர பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் திருமணமான பெண் ஒருவரின் தலையில் கொடூர தாக்கபட்ட நிலையிலும், கணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சுதந்த கன்தகே என்ற 39 வயதுடைய நபர் ஒருவரும் பியுமி மதுஷிகா லியனவடு என்ற 28 வயதுடைய கணவன் மனைவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த கணவனால், தனது தந்தை மற்றும் சகோதரிக்கு எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் சடலம் அறையின் தரையின் கீழ் காணப்பட்டுள்ளது. அவரது தலையில் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.
அதிக அளவு இரத்தம் வெளியேறியதனால் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த கணவனின் சடலம் வரவேற்பு அறையின் ஒரு பகுதியில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் கணவனால் இந்த கொலை செய்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தனது சகோதரனின் உடல் தொங்குவதனை அவதானித்த சகோதரியினால் பொலிஸாரிடம் இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri