மனைவியை சதி செய்து கொன்ற கணவன்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவம் ஓர் கொலை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணவரால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிடிகல மானம்பிட்டிய, தல்கஸ்வில நியாகம பிரதேச சபைக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் இருந்த பெண் கடந்த 30ம் திகதி வாகன விபத்தில் உயிரிழந்தார்.
பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது இது ஒர் படுகொலை என தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் காப்புறுதி பணத்தை பெறும் நோக்கில் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
