மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் எடுத்த விபரீத முடிவு
மொனராகல, மெதகம பகுதியில் தனது மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த சுனில் திசாநாயக்க என்ற 49 வயதுடைய தந்தையாகும். கடந்த 14 ஆம் திகதி தனது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
100 மீட்டர் தூரம் வரை நடந்து சென்றபோது, அவர் அவரது பின்னால் சென்று அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சடலம் மீட்பு
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் நிரோஷா பிரியதர்ஷனி என்ற 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாகும்.
தனது மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
