யாழில் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி: தீவிரப்படுத்தப்படும் விசாரணை
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் மோதி பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(28.03.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பகுதியில் , வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட வேளையில், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதி விட்டு தப்பி சென்றுள்ளார்.
பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் அதிகாரியான அல்பிறெட் என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்திய உழவு இயந்திர சாரதியை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் களமிறங்கி தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - கஜீ





தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam