யாழ்.நகரில் களவாடப்பட்ட நகைகள் பொலிஸாரால் மீட்பு!
யாழ்.நகரில் உள்ள வீடொன்றில் இருந்து களவாடப்பட்ட எட்டரை பவுண் தங்க நகைகள் யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாரின் துரித நடவடிக்கையால் நேற்றையதினம்(27.03.2026) மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள குறித்த வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் பணி நிமித்தம் பகலில் வீட்டில் இருப்பதில்லை.
அதனால் வீட்டைப் பராமரிப்பதற்கென பணிப்பெண் ஒருவரை வேதனத்துக்கு அமர்த்தியுள்ளனர்.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்
இந்தநிலையில், அவர்கள் வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளது.
இதனால் அந்த நகைகள் களவாடப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனையடுத்து விசாரணைகளை துரித கதியில் முன்னெடுத்த பொலிஸார், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக இருந்த 53 வயதான பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து களவாடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.


உண்மையை வெளிக்கொண்டு வரும் விசாரணை: சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு சிலரின் கலக்கம் - அமைச்சர் பகிரங்கம்
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri