கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி இருவரும் கைது
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டுப் பகுதியில் கஞ்சா கடத்திச் சென்ற கணவன் மனைவி இருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் தொட்டியடிப் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸார் உந்துருளியில் சென்ற கணவன் மனைவி இருவரையும் சோதனை செய்துள்ளனர்.
பொலிஸாரின் சோதனை

இதன்போது ஒரு கிலோ 360 கிராம் கேரள கஞ்சாவினை கடத்தி செல்ல முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்படி முத்துஜயன் கட்டினை சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளதுடன் அவர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வாசல் தளத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நெல்லியடியில் வீடொன்றை உடைத்து நகைகள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 28 வயதுடைய ஆண் ஒருவரும் 20 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri