யாழ் - குருநகர் பகுதியில் கணவனும் மனைவியும் கைது!
யாழ் - குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் நேற்றையதினம்(03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டு விசாரணை
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தின் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
