பிரான்ஸில் திடீரென வீசிய சூறாவளி - 1400 வீடுகளுக்கு மின்சாரம் தடை
பிரான்ஸின் தென்மேற்குப் பிராந்தியத்திலுள்ள ஓட் மாவட்டத்தில் வீசிய அரிய வகைச் சூறாவளி காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 39 பேர் காயமடைந்துள்ளதாகப் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓட் மாவட்டத்தில் அமைந்துள்ள பொமாஸ் என்ற கிராமத்தைத் தாக்கிய இந்த சூறாவளியினால் இருவர் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த கிராமத்திலுள்ள சுமார் 300 வீடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதுடன், மக்களின் பாதுகாப்பு கருதி கிராமத்தில் உள்ள அனைவரும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வானிலை அவதான நிலையம் வெளியிட்ட தகவல்
அந்த பகுதியில் வீசிய கடுமையான வெப்ப அலை நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட இடி மின்னலுடன் கூடிய காலநிலை மாற்றமே இந்த சூறாவளிக்குக் காரணம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள 1,400 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சுழல் சூறாவளித் தாக்குதல்கள் ஏற்படுவது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு என்பதுடன், இது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ட்ரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு - அடுத்த மாதம் இடைத்தேர்தல்