வேட்டையாடுபவர்களின் துப்பாக்கிகள் பறிமுதல்
யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளை குறிவைத்து வேட்டையாடுபவர்கள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்தும் சட்டவிரோத துப்பாக்கிகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீவிரப்படுத்தியுள்ளது.
பொதுமக்களிடமிருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் இந்த துப்பாக்கிகள் பெரும்பாலும் மீட்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோத வேட்டை
ஆயுதங்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டவை எனவும் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகளால் பயன்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் அவை சில நேரங்களில் சட்டவிரோத வேட்டைக்கு பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை, அதிகாரிகள் 36 சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளதுடன், தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.
சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பாளர்கள் அல்லது பயனர்கள் பற்றிய எந்தவொரு தகவலையும் 1992 என்ற துரித எண்ணை அழைப்பதன் மூலம் தெரிவிக்க முடியும் என வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.




