மலேசியாவில் தேடுதல் வேட்டை : ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தவர்கள் கைது (Photo)
மலேசியாவின் சாபா மாநிலத்தில் உள்ள புட்டடான் பகுதியில் மலேசிய குடிவரவுத்துறையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் ஆவணங்களற்ற 32 புலம்பெயர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆள் நடமாட்டமில்லாத இரண்டு கட்டிடங்களில் நடத்தப்பட்ட ஆபரேஷன் புட பெர்ஸெப்படு எனும் தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சாபா குடிவரவுத்துறை இயக்குநர் சலிஹா ஹபிப் தெரிவித்துள்ளார்.
“முதலில் குடிவரவுத்துறையினரால் ஆவணங்கள் பரிசோதனைக்காக 124 பேர் சுற்றி
வளைக்கப்பட்டனர். அதில் 32 பேரிடம் முறையான ஆவணங்கள் இல்லை என்பதால் அவர்கள்
கைது செய்யப்பட்டனர்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கைது செய்யப்பட்ட 32 புலம்பெயர்ந்தவர்களில் 14 பேர் ஆண்கள், 11 பெண்கள்,
7 பேர் குழந்தைகளாவர்.
“இவர்களை குடிவரவுத்துறையின் தடுப்பு மையத்திற்கு அனுப்புவதற்காக இவர்களுக்கு
கோவிட் தொற்று இல்லை என்பதை அறிய கோவிட் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது,” என
குடிவரவுத்துறை இயக்குநர் சலிஹா ஹபிப் கூறியுள்ளார்.






அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
