அன்னை பூபதி நினைவாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரத போராட்டம்
தியாகதீபம் அன்னை பூபதியின் 37ஆவது நினைவு நாளை நினைவுகூரும் முகமாக, பிரித்தானியாவில் உணவுத் தவிர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவுத் தவிர்ப்பானது இன்று (19) லண்டனின் மைய பகுதியில் அமைந்துள்ள டவுனிங் வீதி 10ஆம் எண்ணிலுள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னலமின்றி தன்னை அர்ப்பணித்த அன்னை பூபதியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இந்நிகழ்வு நடத்தப்பட்டது.
சுயநிர்ணய உரிமை
உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ஈழத்தமிழருக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தின் மூலம், பிரித்தானிய அரசின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச மேடைகளில் தமிழருக்கான உரிமை விவகாரம் மீண்டும் பேசப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
அன்னை பூபதி
போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், "அன்னை பூபதி ஒரு மகத்தான தியாகத்தின் அடையாளம்.
அவரது நினைவு நாளில், அவரது இலட்சியங்களை நிலைநாட்டும் விதமாக, உலக சக்திகளை நம்மை கேட்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது" என தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில், இங்கிலாந்தில் வாழும் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
