ஈழத் தமிழர்களின் நீதிக்காக நாடு கடந்து தொடரும் போராட்டம்! பிரித்தானியா - இந்தியா வரை மனிதநேய நடைப்பயணம்
புலம்பெயர் ஈழத்தமிழரால் ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி பிரித்தானியா நெல்சன் மண்டேலா சமாதியில் இருந்து இந்தியாவின் காந்தி சிலை வரைக்குமான மனிதநேய நடைப் பயணம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் உணர்வாளரான சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன் ஈழத் தமிழர்களுக்கான நீதிகோரிய காந்திய வழியிலான நடைப்பயணம் கடந்த 26ஆம் திகதி பிரித்தானியா மாநகரின் நெல்சன் மண்டேலா நினைவு சமாதியில் இருந்து ஆரம்பமாகி இந்தியாவின் காந்தி சிலை வரையான நடைப்பயணம் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.
தியாகிகளுக்கான நீதிக்கோரி
குறித்த உணர்வாளரான சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன், தனி ஒரு மனிதனாக தனது சுய விரிப்பின் பேரில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பல இலட்சக்கணக்கான மக்களுக்கான நீதியினை சர்வதேசம் வழங்க வேண்டும்.

வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும், தமிழர் தாயகத்திலே தொடரும் மனிதப் புதைகுழிகளுக்கு பொறுப்பான விசாரணை மேற்கொண்டு அதற்கான நீதி கிடைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த முயற்சி நடைபெற்றுள்ளது.
இதற்கமைய, பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விடுதலையாகி, அந்த நாட்டினை ஆட்சி செய்த அரச தலைவர் நெல்சன் மண்டேலாவின் திருவுருவச் சிலையில் இருந்து அகிம்சையின் பிறப்பிடமான இந்தியாவின் மகாத்மா காந்தியின் உருவச்சிலை வரைக்கும் குறித்த நடை பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்து திருகோணமலையில் தொழில்துறையில் ஈடுபட்டவர் படுகொலை - வெளியான அதிர்ச்சித் தகவல்
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan