ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி! விமான நிலையங்களில் தவிக்கும் பயணிகள்

SriLankan Airlines Bandaranaike International Airport Immigration Japan
By Vethu Nov 02, 2026 01:36 AM GMT
Report

ஜப்பானின் நரிட்டாவை நோக்கி நேற்று இரவு 8.30 மணிக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 454 விமான சேவை எவ்வித முன் அறிவிப்புமின்றி திடீரென இரத்து செய்யப்பட்டமையால், பயணிகள் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானம் வராததன் காரணமாக, மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக நரிட்டா விமான நிலையத்தில் காத்திருந்த 250க்கும் மேற்பட்ட பயணிகள் ஜப்பானில் சிக்கி தவித்ததாக தெரியவந்துள்ளது.

விமானம் இரத்து செய்யப்பட்டதால் மாற்றுப் பயண ஏற்பாடுகள் அல்லது ஹோட்டல் தங்குமிடங்கள் குறித்த தெளிவான தகவல்கள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இதனால் இரு நாடுகளிலும் உள்ள பயணிகள் கடும் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறுகள்

நீண்ட தூரப் பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் நான்கு 4 பெரிய ரக விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இவ்வாறு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி! விமான நிலையங்களில் தவிக்கும் பயணிகள் | Flights Cancelled In Katunayake Airport

மேலும் பிராந்திய பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு சிறிய ரக விமானங்களின் உதிரிப்பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக சேவையிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆறு முக்கிய விமானங்கள் ஒரே நேரத்தில் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இது, முழு சர்வதேச விமான கால அட்டவணையும் வரிசையாக சீர்குலைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

விமான நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசியமான விமான உதிரிப்பாகங்களின் இருப்பைப் பேண முடியாமல் போயுள்ளதாக துறைசார் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டொலர் இழப்பு

மேலும் சிறிய ரக விமானங்களின் இயந்திர உற்பத்தியாளர்களுடன் முறையான பராமரிப்பு ஒப்பந்தங்களை முன்கூட்டியே மேற்காள்ள முடியாமல் போயுள்ளது. இது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி! விமான நிலையங்களில் தவிக்கும் பயணிகள் | Flights Cancelled In Katunayake Airport

இவ்வாறான நீண்டகால ஒப்பந்தங்கள் இல்லாததால், சர்வதேச முன்னுரிமை பராமரிப்பு வாய்ப்புகளையும் சலுகைக் கட்டணங்களையும் இழக்க நேரிட்டுள்ளது. அதற்குப் பதிலாக பாரிய செலவீனங்களை நிறுவனம் சுமக்க வேண்டியேற்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் சிக்கியுள்ள பயணிகளுக்கு நட்சத்திர ஹோட்டல் வசதிகள், உணவு வழங்கல், மாற்று விமான பயணச்சீட்டுகள் மற்றும் சர்வதேச சட்டப்பூர்வ நட்டஈடுகளை வழங்க வேண்டியிருப்பதால் நிறுவனத்திற்கு ஏற்படும் டொலர் இழப்பு மிகப்பாரியதாகும் என தெரியவந்துள்ளது.

அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் முரசு! வானிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் முரசு! வானிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US