வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுப்பு (PHOTOS)
வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஸார்ப் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கமைய, இதுவரை 2,156,344 சதுரமீற்றர் பரப்பளவில் வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக அந்த நிறுவனத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பணிகள் தொடரபில் இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது.
அபாயகரமான வெடிபொருட்களை அகற்றிய இடங்கள்
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 ஆகஸ்ட் மாதம்16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் 2,156,344 இருந்து 33,922 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முகமாலை மற்றும்
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் பகுதியிலும்
அம்பகாமம் பகுதியிலும் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

வெளியேறிய நடிகை, ஆனால் மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஸ்பெஷல் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
