வெளிநாட்டு தரகர்களுடன் இணைந்து மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கை பெண்! வெளியான தகவல்
வெளிநாட்டு தரகர்களுடன் இணைந்து பணத்திற்காக மனித கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரும், முறைப்பாட்டாளரும் மினுவாங்கொடை, கட்டுவெல்லேகம ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் போது நட்பாக இருந்ததாகவும், சந்தேகநபர் தனது தோழி மூலம் மலேசியாவில் வேலை பெற்றுத் தருவதாகவும் அதற்கு நான்கு இலட்சம் ரூபா செலவாகும் எனவும் முறைப்பாட்டாளரிடம் கூறியதாகவும் முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் விமான நிலையத்திலிருந்து இலங்கையர் நாடு கடத்தல்
ஆடைத் தொழிற்சாலை சேவையிலிருந்து வெளியேறிய முறைப்பாட்டாளர் கடந்த 17 திகதி வேலை வாய்ப்பிற்காக கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக மலேசியா சென்றுள்ளார்.
இதன்போது மலேசிய விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்தபோது அந்த ஆவணங்கள் போலியானவை என்பதை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், முறைப்பாட்டாளர் கடந்த 21ஆம் திகதி மலேசியாவில் இருந்து இலங்கைக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதியின்றி நாடு கடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து முறைப்பாட்டாளர் மலேசியாவில் விமான நிலையத்தில் தங்கியிருந்தபோது சந்தேகநபர் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
