வெளிநாடுகளுக்கு பெண்களை பணிகளுக்கு அமர்த்தும் போர்வையில் மனித கடத்தல்! தண்டனை வழங்க நடவடிக்கை
வெளிநாடுகளுக்கு பெண்களை பணிகளுக்கு அமர்த்தும் போர்வையில், நாடு முழுவதிலும் மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கும், தரம் பாராமல் தண்டனை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித கடத்தல்
மனித கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அதிகாரிகள் மட்ட முன்னேற்ற ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில்,
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மனித கடத்தலில் ஈடுபடும் இலங்கையர்கள் தொடர்பில்
சோதனைகளை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், மனித கடத்தல் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் முடிவு
செய்யப்பட்டது.