மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்தியாவிடம் முன்வைத்துள்ள கோரிக்கை
இந்தியா இலங்கையர்களுக்கு ஆதரவளிக்க விரும்பினால், இலங்கையின் உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐக்கிய நாடுகள் குழுவின் செயற்பாடுகளை ஆதரிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி இதனை தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம்
மேலும் கூறுகையில்,“இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டாலும் கூட நல்லாட்சி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவசியத்தை வலியுறுத்துவதாக கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
பல இலங்கையர்கள் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் ஊழலை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நாடுகின்றனர். இதற்கு சர்வதேச ஆதரவும் நடவடிக்கையும் தேவைப்படும்.
ஐக்கிய நாடுகள் குழுவின் செயற்பாடு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம், இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழான ஏனைய குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கும் எதிர்கால வழக்குகளில் பயன்படுத்துவதற்கு ஆதாரங்களை தயாரிப்பதற்கான வலியுறுத்தலை விடுக்கிறது.
அத்துடன் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் நெருக்கடியை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடவும் அது அது கட்டாயப்படுத்துகிறது.
எனவே மாற்றம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கும் இலங்கையர்களை
ஆதரிப்பதற்கு, இந்தியாவும் சபையின் ஏனைய உறுப்பினர்களும் தீர்மானத்தை
ஆதரிப்பது இன்றியமையாதது.”என வலியுறுத்தியுள்ளார்.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

அதிரவைக்கும் பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம் News Lankasri
