யாழில் மாணவன் மீதான தாக்குதலை மூடி மறைக்கும் நிர்வாகம்: மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை
“ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் தகவல்களை மூடி மறைக்கும் நிர்வாகம்” என்னும் தலைப்பில் வெளிவந்த செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயம் சம்பந்தப்பட்டவர்களிடம் அறிக்கை கோரியுள்ளது.
1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த செய்தியில் தென்மராட்சியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்கும் மாணவனை அதே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் மாணவனின் தலையிலும் முகத்திலும் காயம் ஏற்பட்டதையடுத்து, கடந்த (19.06.2023) அன்று சாவகச்சேரி அனுமதிக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை மீறல்
குறித்த தாக்குதலானது அரசியலமைப்பின் உறுப்புரை 11இன் கீழ் அடிப்படை உரிமை மீறல் என்பதுடன் இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரிவு 308A தண்டிக்கப்படக்கூடிய குற்றமுமாகும்.
மேற்படி பத்திரிகை செய்தியில், தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் தங்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தங்களது விளக்க அறிக்கையினை எதிர்வரும் 30.06.2023இற்கு முன் எமக்கு அனுப்பிவைக்குமாறு தென்மராட்சி வலையக்கல்விப் பணிப்பாளர் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தலைமை பொலிஸ் பரிசோதகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




