இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கிறிஸ் வான் ஹொலென் வலியுறுத்து
இலங்கையின் அனைத்துப் பிரஜைகளும் ஜனநாயக செயன்முறையில் முழுமையாகவும் நியாயமாகவும் பங்கேற்பதை உறுதிப்படுத்துவதற்கு மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விவகாரத்தில் முன்நோக்கிப் பயணிக்கவேண்டியது அவசியம் என்று அமெரிக்க செனெட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலென் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க செனெட் சபையின் செல்வாக்குமிக்க உறுப்பினரும், இலங்கை - அமெரிக்க உறவுகளைப் பலப்படுத்துவதை முன்னிறுத்தி செயலாற்றியவருமான கிறிஸ் வான் ஹொலென் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.
இவ்விஜயத்தின்போது அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
அந்தவகையில் கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதுவர் இல்லத்தில் கிறிஸ் வான் ஹொலெனுக்கும் பல்வேறு அரசியல்கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கை
இச்சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், “நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திய செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலவரம், தேர்தல்களை நடாத்துவதில் தொடர் தாமதம், புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளில் பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை கிறிஸ் வான் ஹொலென், அமெரிக்க செனெட் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இயங்கிவரும் பிரதிநிதிகளுடன் சிறந்த தொடர்பைப் பேணிவருவதாகவும், எனவே இவ்விடயங்கள் தொடர்பில் அங்கு ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஜீ.எல்.பீரிஸ், மயந்த திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
