பந்துல உள்ளிட்ட இருவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு
அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
வன்முறை சம்பவங்கள்
கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி விசாரணைக்குத் தேவையான வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில்
நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட
சேதங்கள் தொடர்பான விசாரணைக்காக உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் பலரும் மனித
உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.