பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரேரணை எதற்கு! சர்வதேசத்திடம் கேள்வியெழுப்பும் விமல்
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால் சர்வதேச நாடுகள் உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறான நெருக்கடி நேரத்தில் இலங்கைக்கு எதிராக ஏன் மற்றுமொரு பிரேரணையை முன்வைக்க வேண்டும் என சுயாதீன அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
செயலுருப்பெறாத பிரேரணைகள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,"பிரேரணைகள் மூலம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதைச் சர்வதேச நாடுகள் கவனத்தில்கொள்ள வேண்டும்.
பிரேரணைகள் இன உறவுக்கு மேலும் குந்தகத்தையே ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில் சர்வதேச நாடுகளின் உதவிகளே வேண்டும்.
இந்நிலையில், இலங்கைக்குப் எதிராகப் புதிய பிரேரணை எதற்கு?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட எந்தப்
பிரேரணையும் செயலுருப்பெற்றதாக வரலாறு இல்லை" என தெரிவித்துள்ளார்.