ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம்

United Nations Ranil Wickremesinghe Sri Lanka Government Of Sri Lanka
By Sivaa Mayuri Sep 09, 2022 06:51 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று 37 ராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது ஏற்கனவே குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம்  குற்றம் சுமத்தியுள்ளது.

ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Human Rights Accusation Srilanka

ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆயுதமேந்திய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராவார்.

அவர் சிறுவர் கடத்தல்களில் ஈடுபட்டவர், அவர் அரசாங்க சார்பு ஆயுதக் குழுவில் சேர்ந்தார். அது கடத்தல் மற்றும் குழந்தை வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பொறுப்பாக இருந்தது.

ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Human Rights Accusation Srilanka

2021 ஜனவரியில் இலங்கையின் சட்டமா அதிபர் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பாக பிள்ளையானுக்கு எதிரான குற்றச்சாட்டை கைவிட்டார்.

இராஜாங்க அமைச்சர்கள்

தற்போது கிராமப்புறசாலைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார் என்று கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட மற்றொரு அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஆவார். இவர் துப்பாக்கி முனையில் கைதிகளை மிரட்டியதையடுத்து 2021 செப்டெம்பரில் சிறைத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இவர் இப்போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

மேலும், புதிய நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரான சனத் நிஷாந்த, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பாத்திரத்திற்காக தற்போது பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மே 9ஆம் திகதி, கொழும்பில் நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் தாக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் மே 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிஷாந்த, ஒரு மாதத்தின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Human Rights Accusation Srilanka

கோட்டாபய ராஜபக்ச

இலங்கையில் பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, பொருளாதார முறைகேடு, ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இறுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் ஜூலை மாதம் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க  பதவியேற்றார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க, எதிர்ப்பாளர்களை வலுக்கட்டாயமாக கலைக்க இராணுவத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஏராளமானவர்களைக் கைது செய்ததன் மூலம் கடுமையான ஒடுக்குமுறையை ஆரம்பித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்

ரணிலின் புதிய நிர்வாகம்: அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் | Human Rights Accusation Srilanka

அவர் கொடூரமான மற்றும் மதிப்பிழந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பை வெளியிடும் தலைவர்களை எந்தக் குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கிறார்.

இந்த மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த புதிய தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், மோசமான அமைச்சு நியமனங்கள் மற்றும் அமைதியான எதிர்ப்புக்களுக்கு அதன் கடுமையான பிரதிபலிப்பு, இலங்கையின் உரிமைகள் நிலைமை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கோரியுள்ளார்.

மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US