முள்ளியவளை, நாவல்காடு பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் காணப்படும் மண் கிணறொன்றிலிருந்து மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த பெண் ஒருவர் உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் ,குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலகர் உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகை தந்து உடலத்தை பார்வையிட்டதோடு, சம்பவ இடத்தில் சிவிலுடையில் பொலிஸார் என தம்மை அடையாளபடுத்தும் சிலர் நிறுத்தபட்டுள்ளனர்.
குறித்த சிவில் உடையில் இருக்கின்ற நபர்கள் உடலம் இருக்கின்ற பகுதியை புகைப்படம் எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கு தடை விதித்துள்ளனர்.




பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri