இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித புதைகுழிகள்: சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் கருத்து

Mullaitivu Sri Lanka
By Keethan Jul 16, 2024 04:21 PM GMT
Report

இலங்கையில் 56 மனித புதைகுழிகளில் கொக்குத்தொடுவாயுடன் 21 புதைகுழிகளில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட நீதவான் த.பிரதீபன் முன்னிலையில் அவரின் பிரசன்னத்துடன் அகழ்தெடுக்கப்பட்ட மனித ஓட்டுத்தொகுதிகள் மற்றும் அதனுடனான பிற சான்றுப்பொருட்கள் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

திணைக்களங்களின் பங்குபற்றல்

இந்த அகழ்வு பணியானது ஒரு வருடங்களை கடந்து சிலவாரங்கள் நடைபெற்றுள்ளன. மூன்று கட்டங்களாக இந்த மனித அகழ்வு பணியின் போது 52 மண்டை ஓட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. திணைக்களங்களின் பங்குபற்றலுடன் அகழ்வு பணிகள் நடைபெற்றுள்ளன.

இதற்கான இடைக்கால அறிக்கை போராசிரியர் ராஜ்சோமதேவவினால் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. அதில் இவை 1994-1996 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட எச்சங்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித புதைகுழிகள்: சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் கருத்து | Human Burials Excavated In Sri Lanka

ஒவ்வொரு பங்குபற்றுனர்களின் இறுதி அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மன்று உத்தரவிட்டுள்ளது. இறப்பிற்கான காரணம், பால், வயது, உயரம் போன்ற விடயங்கள் இதன்போது உள்ளடக்கப்பட வேண்டும்

அத்துடன், பங்குபற்றிய காணாமல் போன அலுவலக அதிகாரிகளின் அறிக்கை உள்ளிட்டவர்களின் அறிக்கைகள் அனைத்தும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அறிக்கைகள் எல்லாம் கிடைக்கப்பெற்ற பின்னர் ஒட்டுமொத்த அறிக்கைகளை வைத்து தீர்மானத்திற்கு வரமுடியும் என்று மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

மனித உரிமை மீறல்

இந்த வழக்கு 08.08.2024 திகதி அழைக்கப்பட இருக்கின்றது. இந்த புதைகுழியினை முற்றுமுழுதாக மூடுவதற்கு காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளின் பிரசன்னத்தில் மூடவுள்ளது.

அத்துடன், சர்வதேச நியமனங்களுக்கு அமைவாக இந்த புதைகுழி மூடப்படவேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.

இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித புதைகுழிகள்: சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் கருத்து | Human Burials Excavated In Sri Lanka

இதில் பங்குபற்றியவர்கள் என்ற அடிப்படையில் இது தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் உடலங்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அதிலும் கூடுதலாக பெண் போராளிகளின் உடலங்கள் தான் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதிகமானவர்களின் உடலங்களில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதை காணக்கக்கூடியதாக உள்ளது. குழிகளுக்குள்ளும் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளன. அதனை விட பிற பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ளன.

ஆடைகள் கிழிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. இங்கு ஒரு வன்முறை மற்றும் மனித உரிமை மீறல் நடந்தது என்று அப்பட்டமாக தெரிகின்றது. ஒட்டுமொத்த அறிக்கைகள் வந்ததன் பின்னர்தான் உண்மை துலங்கும் என்று எதிர்பாக்கின்றோம். காணாமல் போனோர் சார்பில் தொடர்ந்து இந்த வழக்குகளில் முன்னிலையாகி இருப்போம்.

காபன் பரிசோதனை

சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இந்த அகழ்வு பணிகள் நடைபெறவேண்டும் என்று நாங்கள் திரும்ப திரும்ப கூறிவந்தோம்.

சர்வதேச முறையிலான தொழில்நுட்பவசதிகள் இலங்கையில் இல்லை என்பதை நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக பார்த்தோம் என்றால் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் குருதிமாதிரி (DNA) இதுவரை எடுத்து சேமித்து வைக்கவில்லை இவ்வாறு பல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றது.

இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித புதைகுழிகள்: சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் கருத்து | Human Burials Excavated In Sri Lanka

அதனை நிவர்த்தி செய்துதான் இந்த அறிக்கையினை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கின்றோம். அறிக்கைகளின் பின்னர்தான் சர்வதேச முறைகளுக்கு அமைவாக இந்த அறிக்கைகள் வந்ததா என்பதை பார்க்கக்கூடியதாக இருக்கும் அந்தந்த நிபுணத்துவம் வாய்ந்தவர்கள்தான் அதனை கூறமுடியும். இதுவரை இலங்கையில் 56 மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியுடன் 21 புதைகுழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன இன்னும் புதைகுழிகள் இல்லை என்று நாம் சொல்லவரவில்லை. காபன் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக என்று கேட்டதற்கு இதுவரை அவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

அரச அலுவலகத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி : பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இரு பணியாளர்கள்

அரச அலுவலகத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி : பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இரு பணியாளர்கள்

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: உயர்தர கப்பலில் பிறந்தநாளை கொண்டாடிய இம்ரான்

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: உயர்தர கப்பலில் பிறந்தநாளை கொண்டாடிய இம்ரான்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US