மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள்
பதுளை - பண்டாரவளை வீதியின் உடுவரை 7ம் கட்டை பகுதியில் மனித எலும்புகள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளமை இன்று (11.01.2024) அவதானிக்கப்பட்டுள்ளது.
வீதியில் இருந்த மண் மற்றும் கற்களை அகற்றும் போது இந்த எலும்புகள் காணப்பட்டதை அடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த ஹாலிஎல பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது மண்சரிவு எற்பட்ட பகுதி மயானம் எனவும், புதைக்கப்பட்ட சடலத்தின் எலும்பு துண்டுகளே இவ்வாறு மண்சரிவில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தன் பின்னர் எச்சங்களை புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக ஹாலிஎல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
