வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்! மன்னார் நகரசபை தவிசாளர் அதிரடி நடவடிக்கை

Mannar Sri Lanka Sri Lankan Peoples
By Ashik Apr 20, 2026 06:26 AM GMT
Report

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதாக மன்னார் நகரசபைக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக நகரசபையின் தவிசாளர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், நேற்று (19) குறித்த நிலையத்திற்கு அருகிலுள்ள வீதிகளில் மனித உடல் பாகங்கள் சிதறிக்கிடந்ததோடு, அவற்றை நாய்கள் இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் வீடொன்றில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - தாய், மகள் உட்பட மூவர் பலி - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

கொழும்பில் வீடொன்றில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - தாய், மகள் உட்பட மூவர் பலி - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

பொதுமக்கள் குற்றச்சாட்டு

நீண்ட காலமாக இந்த நிறுவனம் மனித எச்சங்களை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், மக்கள் நடமாடும் பகுதிகளில் அருகிலேயே வீசப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் நேற்று காலை இந்த சம்பவம் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்! மன்னார் நகரசபை தவிசாளர் அதிரடி நடவடிக்கை | Human Body Parts Thrown On The Street

இது குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், இங்குள்ள இராணுவ முகாம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த செயற்பாடுகள் அமைகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மன்னார் பொலிஸார் மற்றும் நகரசபை ஆகியவற்றுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த மனிதநேயமற்ற மற்றும் சட்டவிரோத செயற்பாட்டைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும் என கோரியுள்ளனர்.

தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தின் அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்து, அதை உடனடியாக அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தனை தொடர்பு கொண்டு வினவிய போது, நேற்று (19) காலையில் மன்னார் சௌத்பார் பகுதியில் இருந்து பொது மக்களிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கே மனித பாகங்கள் இறுதி கிரியைக்கு தயார் படுத்தும் இடத்தில் மனித பாகங்களை மேலாலே புதைத்து வைத்து அதை நாய்கள் இழுப்பதும், சுகாதாரக் கேடுமாக இருக்கிறது.

வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்! மன்னார் நகரசபை தவிசாளர் அதிரடி நடவடிக்கை | Human Body Parts Thrown On The Street

சுகாதாரத்திற்கு கேடான செயற்பாடு

உடனடியாக அந்த இடத்திற்கு நானும் ,மன்னார் நகர சபையின் பொது சுகாதார அதிகாரியும் சென்றிருந்தோம். சென்று பார்த்த பொழுது உண்மையிலேயே புகைப்படங்களை நான் பார்த்தேன். உண்மையிலேயே மிகவும் சுகாதாரத்துக்கு கேடான வகையிலே அந்த இடத்தில் அவற்றை புதைத்து வைத்திருக்கிறார்கள்.மேலாலே புதைத்து வைத்திருக்கிறார்கள்.

நடுக்கடலில் ஈரானின் பாரிய கப்பலை தாக்கிய அமெரிக்க படை.. கொந்தளிக்கும் ஈரான்

நடுக்கடலில் ஈரானின் பாரிய கப்பலை தாக்கிய அமெரிக்க படை.. கொந்தளிக்கும் ஈரான்

எனவே அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அந்த இடங்களை உடனடியாக சீல் வைத்து மூடவும் நான் பொது சுகாதார அதிகாரிக்கு கட்டளையிட்டு இருக்கிறேன். எனவே இவ்வாறான விடயங்களை தவிர்க்க வேண்டும். நான் அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தேன், இறுதி கிரியைக்கு நீங்கள் தயார்படுத்தும் உடல்களின் பாகங்களை மன்னார் பொது மயானத்தில் கொண்டு வந்து, பொது சேமக்காலையில் புதைக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தேன்.

அந்த சட்டங்களை, அந்த கட்டளைகளை அவர்கள் மீறி இருக்கிறார்கள். மன்னார் நகரத்திலே பொது சேமக்காலை க்கு அருகாமையில் எம்பாமிங் (Embalming) செய்யும் ஒரு நிலையத்தை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. அந்த வேலை முடிந்தவுடன் நாங்கள் பொதுப் பெறுகை நடைமுறை ஊடாக அதை கொடுத்து அந்த இடத்திலே மாத்திரம் தான் இனி எம்பாமிங் செய்ய வேண்டும். எம்பாமிங் செய்கின்ற உடல்களின் பாகங்கள் மன்னார் பொது சேமக்காலையில் புதைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.  

வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்! மன்னார் நகரசபை தவிசாளர் அதிரடி நடவடிக்கை | Human Body Parts Thrown On The Street

வீதியில் வீசப்படும் மனித உடல் பாகங்கள்! மன்னார் நகரசபை தவிசாளர் அதிரடி நடவடிக்கை | Human Body Parts Thrown On The Street

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US