நாடளாவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்பு - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது 26,346 நபர்கள் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
548 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 147 நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 212 பேரும், 158 நிலுவையில் உள்ள பிடியாணைதாரர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 135 பேரும், ஆபத்தாக வாகனம் ஓட்டிய 83 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 3,996 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.