இலங்கையில் பாரிய புயலினால் ஆலயத்தில் ஏற்பட்ட அதிசயம்
கண்டி கலஹா, தெல்தோட்டவத்தை பகுதியிலுள்ள ஆலயத்திற்கு அருகில் பெருந்தொகை மதிப்புள்ள இரனத்தினகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட கலஹா, தெல்தோட்டவத்தை பகுதியிலுள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இந்த கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தை பார்வையிட சென்ற ஒருவர் பல்வேறு வண்ணங்களில் பாரிய கல் ஒன்று கிடப்பத்தை கண்டெடுத்துள்ளார்.
பாரிய மண் சரிவு
கண்டுபிடிக்கப்பட்ட கல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேலதிக தகவல்கள் விரைவில் வெளிவரவுள்ளது.

குறித்த பகுதியில் பாரிய மண் சரிவு காரணமாக பல வீடுகள் சேதமடைந்த நிலையில், குறித்த ஆலயமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.
அந்தப் பகுதி தோட்ட மக்கள் 2010ஆம் ஆண்டு முதல் பணம் சேகரித்து அம்மன் ஆலயத்தை நிர்மாணித்திருந்தனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், புயலின் காரணமாக ஆலயம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam