உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையில் பெரும் சர்ச்சை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது என கொழும்பு மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“பிள்ளையான் மற்றும் சுரேஷ் சாலேயின் தகவல் மற்றும் சாட்சி குறிப்புகள் மாத்திரமே அறிக்கையில் உள்ளன.
மௌலானாவின் அறிக்கை
இதில் ஆசாத் மௌலானாவின் எந்த அறிக்கையோ அல்லது விசாரணையோ வெளியிடப்படவில்லை.
இமாம் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது. ஏனெனில் அது முதலில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மற்ற நபர்களின் அறிக்கைகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.
சி.ஐ.டியின் பங்கு விசாரணைகளை நடத்துவது. அது அரசியல்வாதிகளின் பங்கு அல்ல. அரசியல்வாதிகள் இதில் தலையிடத் தேவையில்லை.
விசாரணையை அனுமதிக்காதது குறித்த குற்றவாளிகள் பற்றிய தகவல்களை மறைக்கும் முயற்சியாகும்.
விசாரணையை அனுமதி
மேலும், இமாம் குழுவில் நாம் பார்த்தது போல, அறிக்கையில் பிள்ளையான் மற்றும் சுரேஷ் சாலையின் அறிக்கைகள் மற்றும் ஆதாரக் குறிப்புகள் மட்டுமே உள்ளன.
அடிப்படையில் இதில் தொடர்புடைய ஆசாத் மௌலானா, தனது தரப்பிலிருந்து எந்த சாட்சியத்தையும் எடுக்கவில்லை. அல்லது எந்த கேள்வியையும் கேட்கவில்லை. எனவே, அந்த அறிக்கையை நாங்கள் ஏற்கவில்லை” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |