மன்னார் பொது மருத்துவமனை தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல்
மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தற்போதுள்ள ஒரே மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையான மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை காணப்படுகிறது.
இதன்படி இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் அதிகபட்சமாக இலங்கை ரூபாய் 600 மில்லியன் நிதி மானியத்தை வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அந்த நோக்கத்திற்காக இரு தரப்பினருக்கும் இடையே கையொப்பமிட முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒப்புதல் பெற்றுள்ளது.
அதன்படி, இரு தரப்பினருக்கும் இடையே பொருத்தமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |