இரண்டாக உடைந்த நிலையில் மீட்கப்பட்ட பாரிய படகு
சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் இரண்டாக உடைந்த நிலையில் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த படகானது கடற்கரையில் நங்கூரம் இடப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் இரண்டாக உடைந்து கடலில் காணாமல் போயிருந்தது.
இந்நிலையிலேயே உடைந்து கடற் பகுதியில் காணப்பட்ட எஞ்சிய படகு பகுதிகள் கனரக வாகனத்தின் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை இன்று (11.2.2024) கரையை நோக்கி இழுக்கப்பட்டு வருகின்றது.
இலட்சம் பெறுமதியான இயந்திரம்
குறித்த கடல் பகுதியில் தொழில் செய்துவரும் கடற்றொழிலாளர் ஒருவர் படகு உடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ளதை இனங் கண்டு ஏனையோருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து அங்கு சென்ற பொதுமக்கள் குழுவினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுட்டுள்ளனர்.
மேலும் உடைந்த படகு கல்முனை பகுதி கடற்றொழிலாளர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளதுடன் பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.
எனினும் படகை கரைக்கு இழுத்து வரும் போது கடற்றொழிலாளர்களோ எந்தவித கடற்சாதனங்களோ இருக்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இப்பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெறுவதுடன் படகுகளை நிறுத்தி வைக்கக்கூடிய இறங்கு துறையின்றி சிரமங்களை கடற்றொழிலாளர் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |