தாய்வானின் பிரம்மாண்ட ஆயுத விற்பனை ஒப்பந்தம்! எச்சரிக்கை விடுத்த சீனா
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, தாய்வானுக்கு சுமார் 11 பில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் அதீத திறன் கொண்ட 82 'ஹைமார்ஸ்' ரொக்கெட் லாஞ்சர்கள், 420 ஏடாக்கம்ஸ் ஏவுகணைகள் மற்றும் 60 அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட போர் தளபாடங்கள் இடம்பெற்றுள்ளன.
தாய்வானின் பாதுகாப்பு வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும். இந்த ஒப்பந்தம், அந்நாட்டின் தற்காப்புத்திறனை பெருமளவு வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் அச்சுறுத்தல்
அமெரிக்காவின் இந்த முடிவுக்குத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் நன்றியைத் தெரிவித்துள்ளதுடன், இது சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இந்த அறிவிப்புக்குச் சீனா தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

தாய்வானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் செயல்" என்று சாடியுள்ளது.
தாய்வானைப் பயன்படுத்திச் சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும், இது தாய்வான் நீரிணைப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் வன்முறைச் சூழலையும் உருவாக்கும் என்றும் சீன வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
கடந்த காலங்களில் ஜோ பைடன் நிர்வாகம் வழங்கிய ஆயுதங்களை விட, ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த ஒரே ஒரு ஒப்பந்தத்தின் மதிப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்வான் எல்லையில் சீனப்போர் விமானங்கள்
சமீபகாலமாகத் தாய்வான் எல்லையில் சீனப் போர் விமானங்கள் மற்றும் கப்பல்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், தாய்வான் தனது பாதுகாப்பு பாதீட்டை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
2030-ஆம் ஆண்டிற்குள் தனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தைப் பாதுகாப்பிற்காகச் செலவிடத் தாய்வான் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, தாய்வானுக்கு சுமார் 11 பில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் அதீத திறன் கொண்ட 82 'ஹைமார்ஸ்' ரொக்கெட் லாஞ்சர்கள், 420 ஏடாக்கம்ஸ் ஏவுகணைகள் மற்றும் 60 அதிநவீன பீரங்கிகள் உள்ளிட்ட போர் தளவாடங்கள் இடம்பெற்றுள்ளன.
தாய்வானின் பாதுகாப்பு வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படும்.இந்த ஒப்பந்தம், அந்நாட்டின் தற்காப்புத் திறனைப் பெருமளவு வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்குத் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் நன்றியைத் தெரிவித்துள்ளதுடன், இது சீனாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இந்த அறிவிப்புக்குச் சீனா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. தாய்வானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் செயல்" என்று சாடியுள்ளது.
சீனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி
தாய்வானைப் பயன்படுத்திச் சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும், இது தாய்வான் நீரிணைப் பகுதியில் பெரும் பதற்றத்தையும் வன்முறைச் சூழலையும் உருவாக்கும் என்றும் சீன வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
கடந்த காலங்களில் ஜோ பைடன் நிர்வாகம் வழங்கிய ஆயுதங்களை விட, ட்ரம்ப் அறிவித்துள்ள இந்த ஒரே ஒரு ஒப்பந்தத்தின் மதிப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாகத் தாய்வான் எல்லையில் சீனப் போர் விமானங்கள் மற்றும் கப்பல்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், தாய்வான் தனது பாதுகாப்பு பாதீட்டை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
2030-ஆம் ஆண்டிற்குள் தனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தைப் பாதுகாப்பிற்காகச் செலவிடத் தாய்வான் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா வழங்கவுள்ள இந்த நவீன ஆயுதங்கள் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான ஒரு முக்கியக் கேடயமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த நவீன ஆயுதங்கள் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான ஒரு முக்கியக் கேடயமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri