தென்கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களால் சேகரிக்கப்பட்ட பெருந்தொகை நிதி
தென்கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களால் சேகரிக்கப்பட்ட 38.43 மில்லியன் ரூபா நன்கொடை, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி இன்று (09) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
நிதி
இந்த மனிதாபிமான முயற்சிக்குத் தென்கொரியாவின் ஜியோஞ்சு (Jeonju) நகரில் உள்ள தொழிற்சாலையொன்றில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் 34 வயதான இலங்கையரான ரஷிந்த ஞானேந்திரா தலைமை தாங்கியுள்ளார்.

தமது தனிப்பட்ட கோரிக்கையின் மீது நம்பிக்கை வைத்து, தென்கொரியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வர்த்தக உரிமையாளர்கள் வழங்கிய நன்கொடைகள் மூலம் வெறும் 48 மணித்தியாலங்களில் இந்நிதி சேகரிக்கப்பட்டதாக ரஷிந்த ஞானேந்திரா தெரிவித்தார்.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri