வாக்காளர் அட்டைகளை பெற்று கொள்ளாதவர்களுக்கு ஆணைக்குழு வழங்கியுள்ள அறிவுறுத்தல்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்று கொள்ளாத வாக்காளர்கள், உரிய பிரதேச தபால் அலுவலகத்தில் தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபாலில் விநியோகிக்கும் பணிகள் கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பிரதேச தபால் அலுவலகம்
இந்நிலையில், வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்று கொள்ளாத வாக்காளர்கள், நவம்பர் 14 ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் அவர்கள் தேருநர் இடாப்பில் பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச தபால் அலுவலகத்திற்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்று கிடைக்காத வாக்காளர்கள் சில நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையின் பிரதியொன்றை நிகழ்நிலை (Online) ஊடாக பெற்றுக் கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri