இலங்கையை விட்டு ஒவ்வொரு மணிநேரமும் 32 பேர் வெளியேறுவதாக தகவல்
நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 32 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வெளிவிவகார பிரிவின் தரவுகளுக்கமைய இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இது கடல் வழியாக சட்டவிரோதமாக தென்னிந்தியா அல்லது அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்லும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.
நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரிப்பு..

வெள்ளிக்கிழமை, அவுஸ்திரேலிய எல்லைப் படை சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 46 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது. இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 183 ஆகும்.
உடல் ரீதியான துஷ்பிரயோகம், கொள்ளை, நீண்ட வேலை நேரம், மனித உரிமை மீறல்கள், ஊதியம் இல்லாமை அல்லது குறைவான ஊதியம், இறப்பு மற்றும் ஊனம் போன்ற ஆபத்துகள் இருந்தபோதிலும், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri