இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரி வெளியிட்ட தகவல்
உலக நாடுகளுக்கு மிகப்பெரிய உதாரணமாக இலங்கை மாறியுள்ளதென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டினால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் பெறுவதற்கான சிறந்த உதாரணம் இலங்கை என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோகிவா தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு தாங்க முடியாத கடனை பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் அரசியல் நெருக்கடியும் இலங்கை ஊடாக தெளிவாகியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு நடைபெற்ற சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பாட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.