சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை காக்க வைத்த நிதியமைச்சின் செயலாளர்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உரிய நேரத்தில் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான முதலாவது கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நிதியமைச்சின் செயலாளர் அரை மணித்தியாலம் தாமதமாக கலந்துரையாடலுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பத்து உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச நாணய நிதியம் அதிகாரிகள் பத்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக நிதி அமைச்சுக்கு முன்பாக உள்ள வீதியை பாதுகாப்பு தரப்பினர் மூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri