நாடாளுமன்றத்தில் முக்கிய செலவை பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று உத்தியோகப்பூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த சிறப்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட அதிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்துபசாரம் வழங்குவது நடைமுறை.
இதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.
எனினும் தேநீர் விருந்துபசாரத்துக்கான செலவை நாடாளுமன்றத்தின் மூலம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நிகழ்வு நாடாளுமன்றத்தின் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான செலவை நாடாளுமன்றமே பொறுப்பேற்கும் என நாடாளுமன்ற அதிகாரிகள் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
பிரபல நடிகைக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் நடக்கவிருந்த திருமணம்.. யார் அந்த நடிகை தெரியுமா? Cineulagam
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam