பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவரின் பரிதாப நிலை
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் பல மணித்தியாலங்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெற வேண்டிய பரிதாப நிலைக்குள்ளாகியுள்ளார்.
இலங்கையில் பல மாதங்களாக பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொது மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
வரிசையில் காத்திருக்கும் வெளிநாட்டவர்கள்

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளும் எரிபொருள் பற்றாக்குறை மின்சார தடை போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற சுற்றுலா பயணி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வரிசையில் சிக்கி தவித்துள்ளார்.
பிரித்தானியரின் கவலை

இது மிகவும் ஒரு நெருக்கடியான சூழலாகவே உள்ளதென குறித்த பிரித்தானியர் இலங்கை ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
தன்னை போன்று அதிகளவிலான வெளிநாட்டவர்கள் வரிசையில் நிற்கின்றோம். காலை முதல் மாலை வரை வரிசையில் காத்திருக்கின்றோம்.
இலங்கை மக்களும் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri