மின்சாரம் அடுப்பு பயன்படுத்துவோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு தீவிரம் அடைந்துள்ள நிலையில், மின்சார அடுப்பினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மின்சாரம் அடுப்பு மூலம் சமையல் செய்து வந்த மக்களின் மின் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே நிவாரணம் ஒன்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பு மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை
விசேடமாக கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது.
எரிவாயு, மண்ணெண்ணெய், விறகு கிடைக்காததால், மின்சாரம் மூலம் வீடுகளில் சமைத்து, குழந்தைகளுக்கு உணவளித்ததாக பல அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்த மின்சார கட்டணம்
மின்சாரம் அடுப்பு கொள்வனவு செய்து ஒரு மாதத்திற்குள் மின் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், மேலும் சிலருக்கு அதனையும் விட அதிகரித்துள்ளதாகவும் தாம் உதவியற்ற நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் எரிவாயுவுக்கு பதிலாக விறகு அடுப்புகளை பயன்படுத்த முடியாததால், மின்சார அடுப்பு சமையலுக்கு திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
